Site icon Tamil News

600 கோடியும் அவ்வளவுதானா? : ஆதிபுருஷ் படம் குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்டுள்ள கருத்து!

ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் திகதி வெளியாகவுள்ளது.

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இவருடைய படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தாலும், அனைத்தும் தோல்வியை தழுவ பிரபாஸின் மார்க்கெட் சரிய துவங்கியது.

இந்நிலையில், இந்த படத்தின் மூலம் ஸ்கோர் செய்யலாம் என்றிருந்த பிரபாஸுக்கு இன்னும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் படக்குழுவினர்  அதே படத்தை நல்ல முறையில் கிராபிக்ஸ் செய்ய வேண்டும் என்று மேலும் 100 கோடி செலவு செய்தனர்.  மொத்தமாக 600 கோடியை செலவு செய்துள்ளார்கள்.

இதற்கிடையில் படம் பற்றிய சென்சார் விமர்சனமும் மோசமாக உள்ள நிலையில், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது  இந்த படத்தை முதல் முறை பார்த்த சென்சார் குழுவின் தலைவரும்இ திரைப்பட விமர்சகர் உமைர் சந்து பரபரப்பான ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். இதில் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பு மோசமாக இருக்கிறது. பிரபாஸ் நடிப்பை பள்ளியில் சென்று பயின்று வர வேண்டும் அந்த நிலையில் அவர் நடித்திருக்கிறார். எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இப்போத பிரபாஸின் நிலை சற்று கடினமாகத்தான் தெரிகிறது.

Exit mobile version