Site icon Tamil News

டிரம்பிற்கு எதிராக செயற்படும் ஈரான் – உறுதி செய்த அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தின் தரவுத்தளங்களில் அனுமதியின்றி நுழைந்ததன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனை FBI மற்றும் பிற கூட்டாட்சி அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையை குலைக்கும் நோக்கத்தில், ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் ஈரான் தனது உள் தரவு அமைப்புகளை அணுக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

எனினும், ஈரான் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

Exit mobile version