Tamil News

வேலை கேட்டு சுயவிவரத்துடன் பீட்ஸாவையும் அனுப்பி வைத்த அமெரிக்க இளைஞர் – புதிய முயற்சி

இந்த பரபரப்பான உலகில் வேலை தேடுவது என்பது எவ்வளவு வேலையல்ல, குவியும் வேலைக்கான விண்ணப்பங்களில் நமது தனித்து தெரிய வேண்டும் என்றால் எதையாவது செய்ய வேண்டும் .அந்த வகையில் இளைஞர் ஒருவரின் முயற்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது .

நியூயார்க்கில் வேலை தேடி கொண்டிருந்த டேவிட் என்ற இளைஞர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்காக விண்ணப்பித்த போது அதனுடன் சேர்த்து சுவையான அன்பளிப்பையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

டேவிட் தனது சுய விவரங்களுடன் ஒரு கடிதம் எழுத்தி , அதனுடன் பீட்ஸாவையும் அலுவலகத்தில் கொடுத்து வந்தார்.அந்த கடித்த்தில் உங்கள் அலுவலகத்தில் பொறியாளர் குழுவில் இணைய விருப்பத்தோட் இருக்கிறேன், எனது இணையதளம் சென்று எனது விவரத்தை பார்க்கும் குழுவுக்கு அன்பளிப்பாக இந்த பீட்ஸாவை இணைத்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Image

நல்வாய்ப்பாக அந்த தனியார் நிறுவனத்தின் தலைமைல செயல் அதிகாரிக்கு டேவிட்டின் இந்த வழிமுறை மிகவும் பிடித்துவிட்டது. இதனை ஒரு கதையாக இணையத்திலும் பதிவிட்டுள்ளார் .

அதில் டேவிட்டின் இந்த வழக்கத்திற்கு மாறான புதிய முயற்சியை பாராட்டியிருக்கிறார். தனது சுயவிவரக் குறிப்புடன் தனது இணையத்தின் முகவரியை சேர்த்திருக்கிறார்.அதனை பார்த்து அவரைப் பற்றிய தகவல்கள்களை அறித்துகொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. சமூக வலைத்தளம் பயனர்களும் இவரது ஐடியா மிகவும் பிடித்திருந்து. பலரும் அவரை வேலைக்கு எடுத்து கொள்ளுங்கள் என பலவாறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

 

Exit mobile version