Site icon Tamil News

82 டிகிரி வெப்பநிலையை பதிவுசெய்துள்ள ஈரான் : ஆபத்தில் உள்ள மக்கள்!

ஈரானின் தெற்குக் கடற்கரையில் உள்ள ஒரு கிராமம் இந்த வாரம் ஆபத்தான அதிக வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளதாக காலநிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அங்குள்ள டேரெஸ்டன் விமான நிலையத்தில் உள்ள வானிலை நிலையம் 82.2 டிகிரி செல்சியஸ் வெப்பக் குறியீட்டைப் பதிவு செய்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது உறுதிப்படுத்தப்பட்டால், வெப்பக் குறியீடு மற்றும் 36.1 டிகிரி செல்சியஸ் பனி புள்ளி ஆகியவை கிரகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அளவீடுகளில் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய வானிலை சேவையால் பராமரிக்கப்படும் பதிவுகளின்படி, டேரெஸ்டன் விமான நிலைய வானிலை நிலையம்  38.8°C வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.

ஆனால் ஈரபதத்துடன் வெப்பநிலை உயரும் போது நிலைமை மோசமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுவாக, வறண்ட பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது.

அப்பகுதிகளில் வாழும் மக்கள் குளிராக உணர்ந்தாலும், உடல் அதிகளவிலான வெப்பமாக காணப்படும். வியர்வை வெளியேறாத நிலையில், நிலைமை மோசமாகும்.

Exit mobile version