Site icon Tamil News

IPL Match 34 – லக்னோ அணிக்கு 177 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த சென்னை

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே 24 பந்துகளில் 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிவம் தூபே மற்றும் சமீர் ரிஸ்வி முறையே 3 மற்றும் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக சென்னை அணி 90 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார்.

கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரன்களை குவித்தார். இதன் மூலம் சென்னை அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய குருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னாய் மற்றும் மொசின் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Exit mobile version