Site icon Tamil News

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட்?

ஜூன் 2  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. குறிப்பாக விக்கெட் கீப்பராக யார் விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்து இருக்கிறது.

ஒரு பக்கம் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்றும் மற்றோரு பக்கம் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அதில் இருந்து சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி பேச இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”

ரிஷப் பந்தின் பயணத்தைப் நாம் திரும்பி பார்த்தால், அவர் கடந்து வந்த பாதைகள் அவ்வளவு எளிதானது அல்ல. அந்த அளவிற்கு அவர் மிகவும் நல்ல வீரர் சிறப்பாக விளையாடி நல்ல இடத்தை பிடித்து இருக்கிறார். ரசிகர்களை போலவே எனக்கும் விருப்பம் என்னவென்றால், அவர் திரும்பி வந்து விளையாட வேண்டும் என்பது தான்.

ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில், என்னை பொறுத்தவரையில் இது எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால், அவர் காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சி எடுத்து வருகிறார். அவர் பழையமாதிரி விளையாடி திரும்பி வருவதற்கு இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகும். அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் கூட டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான் ” எனவும் ஜாகீர் கான் கூறியுள்ளார்.

Exit mobile version