Site icon Tamil News

அலுவலகங்களில் ஐபோன் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் – Microsoft அறிவிப்பு

சீனாவில் தனது பணியாளர்களை அலுவல் சார்ந்த பணிகளுக்கு ஐபோன் பயன்படுத்தவும் அலுவலகங்களில் ஆண்ட்ராய்ட் போன்கள் பயன்பாட்டை தவிர்க்கவும் பாதுகாப்பு காரணங்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் ஆரம்பித்தது முதல் ஆண்ட்ராய்ட் கருவிகளுக்கு கார்ப்பரேட் அலுவலகங்களில் தடை விதித்த மைக்ரோசாஃப்ட் உலகளாவிய எதிர்கால பாதுகாப்பு முன்னெடுப்பின் பகுதியாக பணியாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அலுவலக சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சீனாவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியகங்களில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய ஆப்பிள் கருவிகள் விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ளது. சீனாவுக்கும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையேயான விரிசல் அதிகமாகி வருவதை இத்தகைய நடவடிக்கைகள் காட்டுகின்றன.

ஏற்கெனவே சீனாவில் கூகுள் பிளே ஸ்டோர் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஹவாய் மற்றும் ஜியோமி தங்களின் சொந்த ஆப் ஸ்டோர்களை பயன்படுத்தி வருகின்றன. கூகுள் பயன்பாட்டு சேவைகள் சீனாவில் முடக்கப்பட்டதும் மைக்ரோசாஃப்டின் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஒருமுறை வாய்ப்பாக ஐபோன் 15 மொபைல் போன்களை அளிக்க உள்ளது மைக்ரோசாஃப்ட். இதற்கான தருவிக்கும் மையங்கள் ஹாங் காங் உள்ளிட்ட மைக்ரோசாஃப்ட்டின் அலுவலகங்களில் அமைக்கப்படவுள்ளன.

நாடுகளின் ஆதரவிலான ஹேக்கர்களின் இணையவழி தாக்குதலுக்கு அமெரிக்க அரசு நிறுவனங்கள் உள்பட அநேக நிறுவனங்கள் ஆளாகிவருகின்றன. வெளிப்படையாக இந்த அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் வெளியிடாதபோதும் அதன் எதிர்கால பாதுகாப்பு நோக்கத்தின் பகுதியாக இதுவும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version