Site icon Tamil News

AI-ஆல் மாறப்போகும் உலகம்! காத்திருக்கும் ஆபத்து

சமீபத்தில் பாட்காஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பில்கேட்ஸ், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எப்படி மாறியிருக்கும் என்பது பற்றிய சுவாரசிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தற்போது ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்குமா? என்ற கேள்விக்கு அவர் சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

பில்கேட்ஸ் தன்னுடைய நேர்காணலில் எப்போதும் வணிகம் தொடர்பான விஷயங்கள் மட்டுமே பேசுவதில்லை. அதைத் தாண்டி பல கருத்துகளையும் அவர் பகிர்ந்து கொள்வார். AI தொழில்நுட்பம் தொடர்பான கேள்விக்கு, “ நான் 18 வயது முதல் 40 வயது வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சிறப்பாக உருவாக்குவதற்கு ஒரே விஷயத்தில் மட்டும் ஆர்வம் கொண்டவனாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் தற்போது என்னுடைய 68 வது வயதில் வேலை மட்டுமே வாழ்க்கையின் முக்கிய நோக்கம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன்.

எனவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மனிதர்களின் சுமை குறைந்து வாரத்தில் மூன்று நாள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதே நேரம் இயந்திரங்களை முழுமையாக அவைகளே செயல்படவிட முடியாது என்றாலும், இதுவரை ஒரு வேலையில் இருந்த நம்முடைய ஈடுபாடு இந்த தொழில்நுட்பத்தால் முற்றிலும் குறைந்துவிடும். நாம் கஷ்டப்பட்டு பல மணி நேரம் உழைக்க வேண்டியதில்லை” என அவர் கூறினர்.

இதற்கு முன்பு அவர் கலந்து கொண்ட நேர்காணலிலும் AI தொழில்நுட்பங்களின் நன்மை தீமைகளை பற்றி குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ஜூலை 2023ல் இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றி பேசி இருந்தார். அதில் AI தொழில்நுட்பம் மிகவும் அபாயகரமானது.

தவறான தகவல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், DeepFake போன்றவற்றால் பெரும் தாக்கம் ஏற்படும். இதனால் தொழில்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என பேசிய அவர், நாம் இப்போது நினைப்பதுபோல AI தொழில்நுட்பத்தால் பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படாது எனவும், மனிதர்களால் அனைத்தையும் நிர்வகித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Thank You
kalki

 

Exit mobile version