Site icon Tamil News

விண்வெளியில் முதன்முறையாக மலர்ந்த மலர் – நாசா வெளியிட்ட புகைப்படம்

விண்வெளியில் மலர்ந்த பூவின் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக, மனிதர்கள் மற்ற கிரகங்களுக்குச் செல்லும்போது அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு சோதனை முயற்சியாக விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

விஞ்ஞானிகள் 1970 களில் இருந்து விண்வெளியில் வளரும் தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் இந்த குறிப்பிட்ட பரிசோதனையை கடந்த 2015 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் கேஜெல் லிண்ட்கிரென் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடங்கினார்.

இந்த நிலையில் விண்வெளி வீரர்களுகளின் பரிசோதனை முயற்சியாக தற்போது விண்வெளியில் பூத்த பூவின் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

Exit mobile version