Site icon Tamil News

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகம்!

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய இளைஞர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிமுகம் செய்யவிருக்கிறது.

தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) அதனைத் தெரிவித்தார். அதன்படி இளையர்கள் Apple App Store அல்லது Google Play Store போன்ற செயலி விநியோகத் தளங்களில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது சரிபார்ப்பதற்குச் சில விவரங்கள் தேவைப்படலாம்.

அந்தத் தளங்களை நிர்வகிப்பது முக்கியம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் பெரும்பாலான இணையக் கலந்துறவாடல் செயலிகள் மூலமாகவே நடைபெறுவதை அவர் சுட்டினார்.

சில அம்சங்கள், தகவலையும் உள்ளடக்கத்தையும் கையாள முடிந்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று அமைச்சர் தியோ கூறினார்.

Exit mobile version