Site icon Tamil News

சிங்கப்பூரில் தீவிரமடையும் இணைய மோசடிச் சம்பவங்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில்இணைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 8,500 சம்பவங்கள் சென்ற ஆண்டு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டன.

2021ஆம் ஆண்டில் கையாளப்பட்ட 3100 சம்பவங்களைவிட அது ஒரு மடங்கிற்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு அதன் வருடாந்திர அறிக்கையில் அந்த விவரங்களை வெளியிட்டது.

புகார் செய்யப்பட்ட போலி இணையப்பக்கங்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வங்கி, நிதிச் சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களைப்போல் தோற்றம் அளித்தன.

அரசாங்க, தளவாடச் சேவை வழங்கும் நிறுவனங்கள் போலவும் போலியான பக்கங்கள் இருந்தன.

பிணைத்தொகை கோரும் நச்சுநிரல் சம்பவங்கள் சென்ற ஆண்டு 132ஆகப் பதிவானது. எண்ணிக்கை சற்றுக் குறைந்தபோதும் அது பெரிய பிரச்சினையாய்த் தொடர்ந்து நிலவுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

Exit mobile version