Site icon Tamil News

சிங்கப்பூர் மக்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள் – கூகுள் வெளியிட்டுள்ள பட்டியல்

சிங்கப்பூரர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இந்தோனேசியாவின் டென்பசார் (Denpasar), பாலி தீவுகள் முதலிடத்தில் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

முறையே ஜப்பான் நாட்டின் டோக்கியோ இரண்டாவது இடத்திலும், தாய்லாந்து நாட்டின் பாங்காக் மூன்றாவது இடத்திலும், லண்டன் நான்காவது இடத்திலும், தென் கொரியாவின் சியோல் (Seoul) ஐந்தாவது இடத்திலும் தைவான் நாட்டின் தைப்பே ஆறாவது இடத்திலும், ஜப்பான் நாட்டின் ஒசாக்கா (Osaka) ஏழாவது இடத்திலும், ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் எட்டாவது இடத்திலும், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் ஒன்பதாவது இடத்திலும், ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பத்தாவது இடத்திலும் உள்ளன.

கூகுள் இணையதளத்தில் சிங்கப்பூரர்கள் தேடிய இடங்களை மையப்படுத்தியே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலங்கள் தொடங்கியுள்ளதால் ஜூன் மாதத்திற்கும், ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் சிங்கப்பூரர்கள் பயணம் செய்வதற்காக கூகுள் மென்பொருள் மற்றும் இணையதளத்தில் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், சிங்கப்பூருக்கு அதிகம் வந்த பயணிகளில் இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையே அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version