Site icon Tamil News

சர்வதேச ரீதியில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 43 இலங்கையர்கள்

இலங்கையில் செயற்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட மற்றும் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் சிவப்பு நோட்டீஸ்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் தஞ்சம் புகுந்த தேடப்படும் குற்றவாளிகள் தற்போது வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, துபாய்க்கு தப்பிச் சென்ற தேடப்படும் குற்றவாளிகள் போலி அடையாளங்களில் புதிய பாஸ்போர்ட்டை உருவாக்கி வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார்

Exit mobile version