Site icon Tamil News

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்  சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இரு நாடுகளுக்குமிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் கண்காணிப்பு விஜயத்திலும் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

உத்தியோகத்தர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் அவர்களால் வழங்கக் கூடிய வினைத்திறனான பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

Exit mobile version