Site icon Tamil News

திருகோணமலை – 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ள அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (20) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் வைத்தியத்துறை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்,வைத்திய சாலைகளில் போதிய மருந்துகள் பற்றாக்குறையாக காணப்படுகிறது, விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்மையால் பொதுமக்கள் நாளாந்தம் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் 22ம் திகதி மதியம் 12.00 மணியளவில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜயந்த பண்டார,அகில இலங்கை வைத்திய நலன்புரிச்சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் அசங்க ரவினாத், அகில இலங்கை வைத்திய சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் மொஹமட் இக்ராம் ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version