Site icon Tamil News

வாகன இறக்குமதியில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

பொது போக்குவரத்து பேருந்துக்கள், லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதில் எழும் கடன் கடிதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனுதவிக்கான சர்வதேச அங்கீகாரம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் கடன் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதனால் பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் உட்பட பல வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய குழுக்களுடன் கலந்துரையாடி தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version