Tamil News

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம்

பாடசாலை மாணவர்களுக்கு இடையே வாய் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வாய் மற்றும் உதடுகளைச் சுற்றி வெள்ளை நிறம் காணப்பட்டால், அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பொதி செய்யப்பட்டுள்ள வெற்றிலை பாக்கினை சாப்பிட பழகியுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என்று தேசிய பல் மருத்துவமனையின் வாய்வழி நோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஏ.எச்.பி.எஸ். கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

இதை பெற்றோர்கள் உணர்ந்து, அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற பாடுபட வேண்டும் என்று நிபுணர் வலியுறுத்தினார்.

Rise in oral cancer patients | Page 14 | Daily News

தேசிய பல் மருத்துவ மனைக்கு தினமும் 5-20 பேர் வாய் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நோயாளிகள் வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோருக்கு வாய் புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பாடசாலை பல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும், இல்லையெனில் சிகிச்சைக்காக மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பல் சிகிச்சையாளரை சந்திப்பது பொருத்தமானது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

பெரும்பாலும் வெற்றிலை உண்பதால் வாய் புற்றுநோய் ஏற்படுவதாகவும், நாற்பத்தொன்பது சதவீதம் பேர் வெற்றிலையுடன் புகையிலையை உண்பதாகவும் தெரியவந்துள்ளது.இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும் என நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதன்படி வாரத்திற்கு ஒரு முறையாவது வாய் பரிசோதனை செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version