Site icon Tamil News

இலங்கையில் ஒரு வருடத்தில் நாட்டின் வறுமை விகிதம் இரட்டிப்பாகியுள்ளது

6 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா கூறுகையில், நாட்டில் வறுமை விகிதம் ஓராண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமைக் குறிகாட்டிகள் மற்றும் பல பரிமாண இடர் குறிகாட்டிகளை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் விழா இன்று (01) நடைபெற்றது.

2022 இன் மிகை பணவீக்க காலத்தில் பலருக்கு உணவுக்கான அணுகல் மற்றும் கிடைக்கும் தன்மை குறைவாக இருந்தது.

இந்தக் கஷ்டங்கள் பரவியதால், தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கம் சீர்திருத்தச் செயற்பாடுகளை அமுல்படுத்தும் போது, ​​அது மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version