Site icon Tamil News

பெண்கள் ஆடையை அணிவித்து வீதியில் கைவிடப்பட்டுச் சென்ற முதியவர்

பெண் போன்று தோற்றமளிக்கும் வகையில் நீளமான ஆடையை அணிந்து நாத்தண்டி வெலிபன்னாகஹமுல்ல சந்தியில் கைவிட்டுச் சென்ற வயோதிபர் ஒருவர் துனகதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த வயோதிபரை உடுபத்தாவ உள்ளூராட்சி சபையின் பணி நிர்வாகி ரொஷாந்த மனோஜ் அரவிந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

70 – 75 வயதுக்கு இடைப்பட்டவர் என மதிப்பிடப்பட்ட இந்த ஆடவர் கண்டுபிடிக்கப்பட்ட போது, ​​அவர் அணிந்திருந்த பெண்களின் ஆடைகள் மலத்தால் மூடப்பட்டிருந்தன.

தரையில் படுத்து புலம்பிக்கொண்டிருந்த நபரை சுற்றியிருந்த இளைஞர்களின் உதவியுடன் குளிப்பாட்டி சுத்தப்படுத்தியதாகவும், அவர் பசியால் வாடுவதைக் கண்டறிந்ததாகவும், அவருக்கு உணவும் பானமும் கொடுத்து உடனடியாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் அரவிந்த தெரிவித்தார்.

அவரிடம் தகவல் கேட்ட போது அவர் பதுளையை சேர்ந்த அபேரத்ன பண்டார என்று தான் சிரமப்பட்டு பேசியதாகவும் அரவிந்த மேலும் தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் வசிப்பதாக கூறிக்கொள்ளும் தான் அந்த பகுதிக்கு எப்படி வந்தேன் என்ற தகவலை வெளியிட தவறியதாக அவர் கூறினார்.

Exit mobile version