Tamil News

கனடாவில் ராக்குன் ஒன்றினால் இருளில் மூழ்கிய ஏழாயிரம் வீடுகள்!

கனடாவின் டொரன்டோ நகரில் சுமார் 7000 வாடிக்கையாளர்கள் மின்சார வசதியை இழக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ராக்குன் அல்லது அணில் கரடி எனப்படும் ஓர் விலங்கினால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சில மணித்தியாலங்களாக குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது என கனடாவின் மின் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஹைட்ரோ வன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்வினியோக இயந்திரம் ஒன்றில் அணில் கரடி மோதியதன் காரணமாக இவ்வாறு பாரிய அளவிலான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

How to keep raccoons away from your home - Farm and Dairy

முடிந்தளவு வேகமாக மீண்டும் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த விபத்தில் சிக்கிய அணில் கரடிக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version