Site icon Tamil News

ஜெர்மனியில் விமான பயணங்களை திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவித்தல்!

ஜேர்மனியில் விமான  நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் இன்று (01.02) வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுது்து ஊதிய பிரச்சினை குறித்த அழுத்தத்தை அதிகரித்துள்ளனர்.

ver.di தொழிற்சங்கம், Frankfurt, Berlin, Cologne, Duesseldorf, Hamburg, Stuttgart, Leipzig, Hannover, Dresden, Bremen மற்றும் Erfurt ஆகிய 11 விமான நிலையங்களில் வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

பெர்லின், ஹாம்பர்க் மற்றும் ஸ்டட்கார்ட்டில் இருந்து அன்றைய நாளுக்கான அனைத்து புறப்பாடுகளும் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டன.

கொலோனில் ஐந்தில் நான்கு பங்கு விமானங்களும், டுசெல்டார்ஃப் நகரில் மூன்றில் ஒரு பங்கு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

பிராங்பேர்ட்டில், ஜேர்மனியின் பரபரப்பான விமான நிலையத்தின் ஆபரேட்டர், போக்குவரத்து பகுதிக்கு வெளியே உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மூடப்பட்டிருக்கும் என்றார்.

அங்கு பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

த்தம் சுமார் 1,100 விமானங்கள் ரத்து செய்யப்படும் அல்லது தாமதமாகும், இதனால் சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் dpa தெரிவித்துள்ளது.

Exit mobile version