Site icon Tamil News

அமெரிக்காவின் ட்ரோனை தாக்கிய ரஷ்யா : மேற்கு நாடுகளுடன் நேரடியாக மோதும் மொஸ்கோ!

சர்வதேச வான்வெளியை மதித்து நடக்குமாறு இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியமைக்கு ரஷ்யா காரணமாக அமைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். 
 
இது குறித்து டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், எல்லா தரப்பினரும் சர்வதேச வான்வெளியை மதிக்கிறார்கள். ரஷ்யாவையும் அவ்வாறு நடந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்தார். 
 
இந்த சம்பவத்தில் ரஷ்ய சு-27 போர் விமானம் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் எம்.கிய்வ்-9 ஆளில்லா விமானம் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே நேரடியாக மோதிக்கொள்ளும் முதல் தருணமாக இது அமைந்துள்ளது. இந்த சம்பவம் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் பதற்றங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் விமர்சிக்கப்படுகிறது. 

Exit mobile version