Site icon Tamil News

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பில் உக்ரைன் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு மாற்றுவதற்கு உக்ரைன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கான சட்டமூலத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைனும் ரஷ்யாவும் பாரம்பரியமாக ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடின.

ரஷ்யாவின் பாரம்பரியத்தைக் கைவிடவும் உக்ரைனுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் புதிய சட்டம் முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறைந்தது 17ஆம் நூற்றாண்டிலிருந்து உக்ரேன் மொஸ்கோ தேவாலயத்தின் தலைமைத்துவத்தைப் பின்பற்றியது.

ஆனால் 2019ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த கிரீமியாவை ஆக்கிரமித்தபின் உக்ரைனின் பழைமைவாத தேவாலயம் அந்த உறவை முறித்துக்கொண்டது.

கடந்த ஆண்டு மக்கள் டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்ட உக்ரைனின் பழைமைவாத தேவாலயம் அனுமதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

Exit mobile version