Site icon Tamil News

பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும்!

மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கான கதவுகளைத் திறந்து விடாத வகையில் கடுமையான கண்காணிப்பின் பின்னர் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “நாங்கள் 3,000 க்கும் மேற்பட்ட HS குறியீடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இதனை நிறுத்துவதன் மூலம், நாங்கள் இருப்புகளைப் பாதுகாத்தோம்.

ஒரு நாடு நீண்ட காலத்திற்கு இறக்குமதியைத் தடை செய்ய முடியாது. இப்போது வளமான பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி, வளமான பொருளாதாரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது, சர்வதேச வர்த்தகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது மிக முக்கியமானது.

மாற்றுமுறைகள் போன்ற அனைத்து அம்சங்களையும் பார்த்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version