Site icon Tamil News

கனடிய விமான நிலையத்தில் மீட்கப்பட்ட சட்டவிரோத மருந்துப் பொருட்கள்

கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் சுமார் 3.3 தொன் எடையுடைய சட்டவிரோத மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் இரண்டு மாத காலப்பகுதியில் இவ்வாறு பாரிய அளவில் சட்டவிரோத மருந்து பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனேகமான சட்டவிரோத மருந்து பொருட்கள் ஆசியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆசிய நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பாரிய அளவிலான சட்டவிரோத மருந்து பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.பாலுணர்வை தூண்டக்கூடிய மற்றும் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோத மருந்து பொருட்களை இவ்வாறு அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகையை மருந்து மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் மனிதரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version