Tamil News

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இலியானா! இவர்தான் காரணமா? அவரே வெளியிட்ட புகைப்படம்

கர்ப்பிணி நடிகை இலியானா சமீபத்தில் தனது காதலனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழில் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகை. சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குழந்தையின் தந்தை யார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

கர்ப்பிணி இலியானாவுக்கு இணையதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவர் தனது பெரிய வயிற்றின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். சமீபத்தில், இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடையாளம் தெரியாத காதலனுடன் இருக்கும் மங்கலான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காதலனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘டேட் நைட்’ என்ற வாசகத்துடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version