Site icon Tamil News

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், தெரிவிக்கவும் – சுங்கம்

 

 

விசாரணைக்காகத் தேடப்படும் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு இலங்கை சுங்கம் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.

இதனடிப்படையில், இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மத்திய புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்குமாறு இலங்கை சுங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மொஹமட் நசீர் மொஹமட் அடில் என அறியப்பட்ட அவரது கடைசி முகவரி இலக்கம் 51, கார்மல் மாவத்தை, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 என அடையாளம் காணப்பட்டது.

இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு 0112471471, 0112431854 அல்லது 0704387112 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்.

Exit mobile version