Site icon Tamil News

உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவு

2023 உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு பட்டியலில் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளன.

உலகளவில் ஐரோப்பா மிகவும் அமைதியான பகுதி என்று கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version