Site icon Tamil News

இலங்கை மக்கள் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கியுள்ள ஆணையை மதிக்கின்றேன் – அலி சப்ரி

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக மதிக்கின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

அவர் தனது சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

“நீண்ட மற்றும் கடினமான தேர்தல் பிரச்சாரத்தின் பின்னர் தேர்தல் முடிவுகள் தற்போது தெளிவாக உள்ளன.

நான் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தாலும்,மக்கள் தங்கள் முடிவை எடுத்துள்ளனர்.

நான் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக மதிக்கின்றேன்.

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பினை மதிப்பது முக்கியமானது நான் அதனை செய்கின்றேன்.

நான் அனுரகுமாரதிசநாயக்கவிற்கும் அவரது குழுவினருக்கும் எனது நேர்மையான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டிற்கு தலைமை தாங்குவது சாதாரண விடயமில்லை,இலங்கைக்கு மிகவும் அவசியமாக உள்ள அமைதி வளம் ஸ்திரதன்மை ஆகியவற்றை அவர்களின் தலைமைத்துவம் கொண்டுவரும் என நான் நேர்மையாக எதிர்பார்க்கின்றேன்.

அவர்கள் எதிர்கொள்ளும் சவாலகள் மிகவும் கடினமானவை,கடந்தகாலத்தின் படிப்பினைகள்,தங்களிற்கு முன்னர் ஆட்சியிலிருந்தவர்களின் வெற்றி தோல்விகளை அவர்கள் ஆராய்வார்கள் கற்றுக்கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

உண்மையான வெற்றி தேர்தலில் வெல்வது மாத்திரமில்லை மாறாக புத்திசாலித்தனமாக ஆட்சி செய்வது, மக்களின் தேவைகளிற்கு உண்மையாகயிருப்பது என்பதை வரலாறு எங்களிற்கு கற்பித்துள்ளது.

கடந்தகாலங்களில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் தங்களின் வாக்குறுதிகளை கண்டுகொள்ளாமல்,உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதற்கான வாய்ப்பை தவறவிட்டனர்.

திசநாயக்கவும் அவரது குழுவினரும் இந்த தவறிலிருந்து பாடம் கற்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version