Site icon Tamil News

ஜெர்மனி 3,500 ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தனியார் வங்கி!

ஜெர்மனியை பின்புலமாக கொண்ட டாய்ச் வங்கி, 3,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

பன்னாட்டு வர்த்தகம் தொடர்பான கடன்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் டாய்ச் வங்கி, கடந்தாண்டு தனது லாப விகிதத்தில் எதிர்பாரா இழப்பை சந்தித்தது. இதனால் செலவுகளை குறைக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர் பணி நீக்கத்தை கையில் எடுத்துள்ளது.

டாய்ச் வங்கியின் தலைமை நிர்வாகி கிறிஸ்டியன் தைவிங், ’ஒரு நிச்சயமற்ற சூழலில் வங்கியின் செயல்திறன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பயணிப்பதை’ உறுதி செய்துள்ளார்.

மேலும் கடந்த 16 ஆண்டுகளில் மிக அதிகமான அளவில், வரிக்கு முந்தைய லாபமாக கிட்டத்தட்ட 5.7 பில்லியன் யூரோக்களை டாய்ச் வங்கி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதற்கான புள்ளி விவரமாக இருப்பினும், கடந்தாண்டு லாபத்தில் டாய்ச் வங்கி அடிவாங்கிய முக்கியமாக பார்க்கப்படுகிறது.

லாபத்தில் சறுக்கியதை அடுத்து செலவுகளை கட்டுப்படுத்த வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டாய்ச் வங்கியின் லாபத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2.5 பில்லியன் யூரோ செயல்திறனுக்கு புதிய நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் அவசியம் என வங்கி கண்டடைந்துள்ளது. இதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நேரடி வாடிக்கையாளர் அல்லாத பிரிவுகளில் 3,500 பணியிடங்களை குறைக்கும் முடிவை டாய்ச் எடுத்துள்ளது. இதனால் அந்த பணியிடங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

Exit mobile version