Tamil News

எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் சண்டையா.. ஒரே போடாக போட்டார் லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பெரிய சண்டையே நடப்பதாக செய்திகள் வந்த நிலையில், அந்த விஷயம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லியோ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் படத்தின் புரமோஷனை ஆரம்பிக்க யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்க தொடங்கியுள்ளார்.

லியோ படத்தில் ஒரு சண்டை காட்சியில் சுமார் 150 பேர் நடிகர் விஜய்யை கட்டி இழுத்து செல்வார்கள், அந்த காட்சியில் டூப் வைக்கலாம் என்று சொன்னோம். வேற ஆள் கையை காட்டினால் கூட என் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள், டூப் மட்டும் வேண்டாம் என சொல்லி விஜய் அண்ணாவின் நடித்தார்.

பல பேர் நகம் எல்லாம் அந்த காட்சியின் போது கீறி இருக்கும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பயங்கர வெறித்தனமாக அந்த சண்டைக் காட்சியில் நடித்து இருந்தார்.

எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் சண்டை என சோசியல் மீடியாவில் வந்த போஸ்ட்டை நானும் விஜய் அண்ணாவும் ஒன்றாகத்தான் பார்த்தோம். இருவரும் அதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க அப்படின்னு சொன்னாரு.. மாஸ்டர் படத்திலிருந்து அண்ணா என உரிமையுடன் நடிகர் விஜய் மட்டும் தான் கூறி வருகிறேன். அந்த அளவுக்கு உரிமைக் கொடுத்துள்ள நபர் அவர் மட்டும்தான் என பேசி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

Exit mobile version