Tamil News

“கொன்று விடுவார்கள்” இந்தியன் – 2 குறித்து காஜல் வெளியிட்ட செய்தி

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இறுதி கட்ட படிப்பிடிப்பை நெருங்கி இருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தை தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர், ‘இந்தியன் 2’ படத்தின், இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் அப்பாவாக நடித்த கமலஹாசனுக்கு சுகன்யா ஜோடியாகவும், மகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை மனிஷா கொய்ராலாவும் நடித்திருந்தனர்.

இரண்டாம் பாகத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இம்மாதத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும் என கூறப்படும் நிலையில், இந்தியன் 2 படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு தடைகளை கடந்து, தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இன்று நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.

ரசிகர்களும் சமூக வலைத்தளம் மூலமாக தங்களின் வாழ்த்துக்களை மழை போல் பொழிந்தனர். இந்நிலையில் நடிகை, காஜல் அகர்வால் தன்னுடைய நடிப்பில் தெலுங்கு உருவாகியுள்ள ‘சத்யபாமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்தியன் 2 படம் குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது . இதற்கு பதில் அளித்த காஜல்,

இந்தியன் 2 படத்தில் தனக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்றும், இது போன்ற ஒரு வேடத்தில் இதற்கு முன்பு நான் நடித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இந்தியன் 2’ படம் குறித்து இதற்கு மேல் ஏதாவது நான் சொன்னால் படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள் என சிரித்துக் கொண்டே கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

Exit mobile version