Site icon Tamil News

பிரித்தானியாவில் கணினி பிரிவின் பிழையால் கடும் நெருக்கடியில் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவில் உள்துறை அலுவலக தரவுத்தளத்தில் ஏற்பட்ட பெரிய தவறு காரணமாக 76,000 பேர் தவறான பெயர்கள் அல்லது புகைப்படங்களைக் கொண்டுள்ளனர்.

தற்போது கசிந்துள்ள ஆவணங்களுக்கமைய, குடியேற்ற விண்ணப்ப செயலாக்கத்தில் தாமதம், எல்லைகளில் நீண்ட வரிசைகள் மற்றும் தவறான அடையாள அட்டைகளின் விநியோகம் ஆகியவற்றிற்காக உள்துறை அலுவலகத்தின் தரவுத்தள தோல்வியின் அளவை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தவறால் 76,000 க்கும் மேற்பட்டவர்கள் தவறான பெயர்கள், புகைப்படங்கள் அல்லது குடியேற்ற நிலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

கணினி சிக்கல்களில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் கணினி பிரிவை குற்றம் சுமத்தியுள்ளது.

எப்படியிருப்பினும் எல்லை அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் கருவியான அட்லஸில் பிரச்சனை இல்லை என்று அமைச்சர்கள் மறுத்துள்ளனர்.

புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வேலை செய்வதற்கான உரிமைகளை நிரூபிக்க முடியவில்லை மற்றும் வீட்டுவசதி அல்லது இலவச தேசிய சுகாதார சிகிச்சையை அணுக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு ஆவணத்தில், பிறரின் கடவுச்சீட்டு விவரங்கள் வேறு சிலரின் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தரவுத்தளத்தில் உள்ள சில ஆயிரம் பேரின் இந்த முக்கியமான குறைபாடு குறித்து உள்துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தகவல் ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்தி வருவதாக அரச வட்டாரங்கள் உறுதி செய்தன. அத்துடன் இந்த பிழை தரவு மீறல்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்று பரிசீலித்து வருகிறது.

Exit mobile version