Tamil News

பொலிஸார் தன்னை துன்புறுத்துவதாக கூறி வீடியோ பதிவு… வாலிபரின் விபரீத முடிவால் பரபரப்பு

மாங்காடு அடுத்த பரணிபுத்தூர், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரூபன்(40), ஆட்டோ ஓட்டி வந்தார் இவர் மீது போரூர் பொலிஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ஆதிலட்சுமி, லீலாவதி என இரண்டு மனைவி உள்ள நிலையில் 4 பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று இரவு ரூபன் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தன் மீது அளித்திருந்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்த அம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தன்னை அவதூறாக பேசுயதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் பேசி தன் மீதுள்ள பழைய வழக்குகள் எல்லாம் எடுத்து தன்னை மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன் என கூறி மிரட்டுவதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டுமென அழுதபடி வீடியோ பதிவிட்டு அவரது இரண்டாவது மனைவி லீலாவதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்து அவரது மனைவி ரூபன் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாங்காடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து நிலையில் மாங்காடு பொலிஸார் இறந்து கிடந்த ரூபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரூபன் கடந்த 2019 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த ஒருவரிடம் இரண்டு ஷேர் ஆட்டோக்களை வாங்கியதாகவும் அதற்கு பாதி பணம் கொடுத்த நிலையில் மீதம் ரூ.3 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டி இருந்ததாகவும் தற்போது வாகனத்தை விற்ற நபர் பணத்தை பெற்று தருமாறு அம்பத்தூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இதன் பேரில் விசாரணைக்கு

Indian police Images - Search Images on Everypixel

அம்பத்தூர் பொலிஸ் நிலையம் சென்ற ரூபன் வாங்கிய இரண்டு ஆட்டோக்களில் ஒரு ஆட்டோவை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டு 24ம் திகதி விசாரணைக்கு வருவதாக தெரிவித்து விட்டு வந்ததாகவும் ஆனால் விசாரணைக்கு ஆஜராக நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணைக்கு வர வேண்டும் என ரூபனை செல்போனில் அழைத்து பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ரூபன் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்து ஆர்டிஓ விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்களும் மனைவியும் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரது இரண்டு மனைவிகள் கூறுகையில், பணம் கொடுத்து ஆட்டோவை எடுத்து வந்த நிலையில் பணத்தை பாதி கொடுத்த பிறகு மற்ற தொகையை சிறிது, சிறிதாக கொடுத்ததாகவும் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடாத நிலையில் அவரை பழிவாங்கும் நோக்கில் சப் இன்ஸ்பெக்டர் மிரட்டும் தோனியில் பேசி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்றதாகவும் அந்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும், ஆர்.டி.ஓவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version