Site icon Tamil News

வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இயற்கை முறையில் கூட்டுறவு சங்கத்தினால் இயக்கப்படும் முல்லை மரச்செக்கு கடலை எண்ணெய் தயாரிக்கும் செக்கு இயந்திரத்தை பார்வையிட்டு அதன் தரம் மற்றும் என்னை தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தார் பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள இ சேவை மையம் மற்றும் நகை கடன் சேவைகளை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் தொழில்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றோம், இந்நிலையில் இன்று வாயலூர் பகுதியில் விலையும் வேர்க்கடலையைக் கொண்டு இயற்கை முறையில் முல்லை கடலை செக்கு எண்ணெய் தயாரிக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு இப்பகுதியில் விளையும் கடலையை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணை சுத்தமாகவும் தரமாகவும் தயாரிக்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் மழை காலங்களில் நனைந்து சேதம் அடைவதை தடுக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டு 238 கோடி ரூபாயில் 213 இடங்களில் செமி கவர் குடோன்கள் அமைக்க திட்டமிட்டு இரண்டு கட்டமாக முதல்வர் துவக்கி வைத்துள்ளார் இதனால் 2.86 மெட்ரிக் டன் நெல் பாதுகாத்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சரக கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் சுடர்விழி உட்பட நிர்வாகிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version