Tamil News

யாருக்கும் தெரியாமல் அஜித் செய்துவரும் செயல் அம்பலம்!!

சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது தொட முடியாத அளவிற்கு உச்சத்திற்கு இருக்கும் அஜித், ஆரம்பத்தில் இருந்தே அரசியலை ஒதுக்கிய அவர் தற்போது பிரதமர் மோடியின் நண்பருடன் கைகோர்த்து மறைமுகமாக செய்திருக்கும் வேலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜெய்சங்கருடைய மூத்த மகன் விஜய் சங்கர் கண் மருத்துவராக உள்ள நிலையில், இளையமகன் சஞ்சய் சங்கர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

விஜய் சங்கர் சினிமாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இலவசமாக சிகிச்சை செய்து வருகிறார்.

அது மட்டுமல்ல இவர் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு முகம் மூலம் இலவச சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் இவருடைய மருத்துவமனைக்கு வருபவர்கள் மேல்சிகிச்சைக்காக பணம் இல்லை என திரும்பி சென்றால், அவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவிலேயே இலவசமாக சிகிச்சை அளிப்பாராம்.

இதை கேள்விப்பட்ட அஜித் இவரை சந்தித்து இவருடன் நண்பராக இருந்து வருகிறார் மற்றும் இவர் செய்யும் உதவிகளுக்கு அஜித் தனது பங்கிற்கு பண உதவிகளை கொடுத்து வருகிறார்.

எவ்வளவு பணமாக இருந்தாலும் உடனே கேளுங்கள் நான் செய்கிறேன் என்று அந்த வார்த்தையையும் அஜித் கூறி இருக்கிறார். மேலும் விஜய் சங்கர் மோடிக்கு அறிமுகமானவர்.

விஜய் சங்கர் செய்யும் உதவி அவருடன் அஜித்தும் சேர்ந்து பல வருடங்களாக யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் உதவிகளுக்கு பணம் கொடுத்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நிச்சயம் அஜித் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இனிவரும் நாட்களில் அவரது முடிவு மாறலாம். மோடியின் நண்பரான விஜய் சங்கருடன் கைகோர்த்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை வழங்குவதற்காக பணத்தை கணக்கு பார்க்காமல் கொடுக்கும் அஜித்தை பலரும் பாராட்டுகின்றனர்.  

Exit mobile version