Site icon Tamil News

மன உளைச்சலால் தலைமுடி உதிர்வா? மருத்துவர் கூறும் காரணம்

அதிகமான மன உளைச்சல் ஏற்படும்போது தலைமுடி உதிர்வதைச் சிலர் கவனிக்கின்றனர்.

தலைமுடி கொட்டுவதற்கும் மன உளைச்சலுக்கும் சம்பந்தமுள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் மேயோ மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த டேனியல் ஹால்-ஃபிளேவின் பதிலளித்துள்ளார்.

“ஆம், அதிக மன-உளைச்சலால் முடி உதிரக்கூடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான மன-உளைச்சலால் 3 விதமான முடிகொட்டும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்கிறார் அவர்.

1. டெலோஜன் எஃப்ளுவியம் (Telogen Effluvium)

Follicles எனும் தலைமுடி வளரும் துவாரங்களை ஓய்வுநிலையில் ஆழ்த்தக்கூடியது மனஉளைச்சல்.

அதிக மனஉளைச்சல் ஏற்படும் சில மாதங்களிலேயே முடியைச் சீவும்போதோ, கழுவும் போதோ, முடி உதிர்வதைக் கவனிக்கலாம்.

2. டிரிக்கோட்டிலோமேனியா (Trichotillomania)

இது ஒருவித மனநோய். ஒருவர் அதிகமான மனஉளைச்சலை எதிர்நோக்கும்போது தலையிலிருந்தோ, உடலின் மற்ற பாகங்களிலிருந்தோ முடியைப் பிடுங்கியெடுக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம்.

3. அலோபீசியா அரெயாட்டா (Alopecia Areata)

உடலின் நோயெதிர்ப்புச் சக்தி பாதிக்கப்படும்போது அலோபீசியா அரெயாட்டா ஏற்படக்கூடும்.

சில வேளைகளில் அதனால் தலைமுடி உதிரலாம்.

தலையின் சில பகுதிகளில் திடீரென முடியில்லாமல் போவதைக் கவனித்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும் என்கிறார் டாக்டர் ஹால்-ஃபிளேவின்.

Exit mobile version