Site icon Tamil News

ஜெர்மனிக்குள் நுழையும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களால் திணறும் அரசாங்கம்

ஜெர்மனி நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் தொகை அண்மை காலத்தில் அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவித்து வருகின்றது.

ஜெர்மனி நாட்டுக்குள் நுழைய பல நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் சட்ட விரோதமான முறையில் உள் நுழைய முயற்சித்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த மாதம் 40 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளதாக ஜெர்மனியின் எல்லை தடுப்பு பொலிஸார் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அதாவது கடந்த ஆவணி மாதம் மட்டும் இவ்வாறு 15000 பேர் சட்ட விரோதமான முறையில் ஜெர்மன் நாட்டுக்குள் நுழைய முயற்சித்ததாகவும்,

இந்நிலையில் கடந்த ஆடி மாதத்தில் இவ்வாறு 10714 பேர் சட்ட விரோதமான முறையில் ஜெர்மன் நாட்டுக்குள் நுழைய முனைந்ததாகவும் எல்லை தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version