Site icon Tamil News

இலங்கை கல்பிட்டி குளத்தில் கடற்படையினரால் மீட்கப்பட்ட தங்கம்!

இலங்கை கடற்படையினரால் கல்பிட்டி தோராயடி குளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 4 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் தோராயடி கடற்கரைக்கு அருகில் தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜயாவால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, கடல் வழிகள் ஊடான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான கடற்படையின் வழக்கமான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே தங்கப் பொட்டலத்தை மூழ்கடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மீட்கப்பட்ட தங்கம் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்கவிலுள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version