Site icon Tamil News

குளுக்கோமா பாதிப்பு தீவிரம் – தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

90% பேர் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை இயக்குனர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த – மார்ச் 10″ஆம் தேதி முதல் 16″ஆம் தேதி வரை குளுக்கோமா விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

இந்த கண் அழுத்த நோய் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர் ராமமூர்த்தி கூறியதாவது

இந்த கண் நோயானது கண்ணின் நரம்புகளை பாதித்து கண் பார்வையை சிறு சிறிதாக போக்கும் தன்மை உடையது. இதனை எளிதில் கண்டறிய முடியாது.

மனிதனுக்கு வரும் சர்க்கரை வியாதி போல், கண் அழுத்த நோய் ஒருமுறை வந்தால் வாழ்நாள் முழுவதும் தொடரும் என எச்சரிக்கின்றனர்.

மருத்துவர்கள் மார்ச் 10″ஆம் தேதி முதல் 16″ஆம் தேதி வரை உலக குளுக்கோமா விழிப்புணர்வு வாரமாக கண் மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

உலக அளவில் 64.3 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்பு உள்ளதாகவும் இதில் 21 சதவிகித மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வை இழந்துள்ளதாக மருத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 40″வயதிற்கு மேற்பட்ட சுமார் 11.9 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு அதில் 12.8 சதவீதம் பேர் கண் பார்வை இழந்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்த குளுக்கோமா நோய் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும் என்றார்.

கண்ணில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு இந்த குளுக்கோமா நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றார்.

எளிதில் கணிக்க முடியாத இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 10″ஆம் தேதி முதல் 16″ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதாக இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version