Site icon Tamil News

புளியந்தோப்பு ரவுடி வெட்டி படுகொலை

சென்னை புளியந்தோப்பு குருசாமி ராஜாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கருப்பா என்கின்ற ரகுபதி 30 இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்,

இவர் மீது பேசன் பிரிட்ஜ் புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருவதால் தொடர்ந்து வழக்குகளில் சிக்குவதால் இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவன்யூ சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்து அங்கு வசித்து வந்தார்,

இந்நிலையில் நேற்று காலை ஏழு முப்பது மணி அளவில் முத்தமிழ் நகர் தெற்கு அவன்யூ சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உட்கார்ந்து இருந்தபோது இரண்டு ஆட்டோக்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியை எடுத்து ரகுபதியை வெட்டினர்.

அப்பொழுது ரகுபதி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார் தொடர்ந்து அந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து அங்கிருந்த பாலாஜி என்பவரது வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டினர்,

இதில் தலை கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த ரகுபதி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கொடுங்கையூர் குப்பைமேடு அருகே  பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கொடுங்கையூர்  போலீசார் நேற்று இரவு அப்பகுதிக்கு சென்றனர்,

அப்பொழுது போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஆறு பேரும் தப்பி ஓட முயற்சி செய்தனர் போலீசார் அவர்களை விரட்டி பிடித்ததில் மூன்று பேர் மதில் சுவர் மீது ஏறி கீழே குதித்த போது அவர்களுக்கு கை மற்றும் கால்கள் உடைந்தன.

அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கொடுங்கையூர் போலீசார் மாவு கட்டுப் போட்டனர் இதில் கொடுங்கையூர்  பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 28.

புளியந்தோப்பு  பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கின்ற வெள்ளை மணி 30. சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 27. டுமில் குப்பம் பகுதியைச் சேர்ந்த சீமன் ராஜ் 40. நேளும்பூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி 33.

கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரபீக் 26 ஆகிய ஆறு பேரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர் இதில் சுரேஷ் மற்றும் வெள்ளை மணி ஆகிய இருவருக்கும் வலது கை உடைந்தது.

மணிகண்டன் என்பவருக்கு வலது கை மற்றும் இடது கால் உடைந்தது. கொலைக்கான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் நேற்று முன்தினம்  இரவு உயிரிழந்த ரகுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் ரகுபதி வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தனர்,

அப்போது  மது போதையில் இரு தரப்பிற்கும் இடையே  வாய் தகறாரு ஏற்பட்டுள்ளது அப்போது ரகுபதி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அதனை திருப்பி வைத்துக் கொண்டு மணிகண்டனை அடித்துள்ளார்,

மேலும் அவரை வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என்று கூறி அதே இடத்தில் அமர வைத்துள்ளார்  நீண்ட நேரத்திற்கு பிறகு ரகுபதியின் மனைவி வந்து மணிகண்டனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்,

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Exit mobile version