Site icon Tamil News

ஹமாஸால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட ஜெர்மன் பெண் உயிரிழப்பு

ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் செயற்பாட்டாளர்களால் பிடிக்கப்பட்ட சுருபி ஷானி லௌக் என்ற ஜெர்மன் பெண் உயிரிழந்துள்ளார்.

அவரது கொலையில் பலர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

காசா பகுதியில் அவரது உடல் இஸ்ரேலியப் படைகளால் கண்டுபிடிக்கப்பட்டதை அவரது குடும்பத்தினரும் இஸ்ரேலிய அரசாங்கமும் உறுதிப்படுத்தினர்.

அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகளின் இலக்காக மாறிய காசா எல்லைக்கு அருகே நடந்த சூப்பர்நோவா இசை விழாவில் 23 வயதான அவர் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டார்.

அவரது தாயார் ரிக்கார்டா லூக், தனது மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு ஜெர்மன் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இதுவரை அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

ஹமாஸ் தலைமையிலான இந்த மோதல்களால் இஸ்ரேலில் 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version