Site icon Tamil News

உலகின் மிக நீளமான முடி கொண்ட பெண் கின்னஸ் சாதனை

உலகின் மிக நீளமான முடி கொண்ட நபராக அமெரிக்காவின் Tammy Manis தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

58 வயதான Tammy Manis, அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள Tennessee, Knoxville இல் பிறந்தார்.

அவர் தனது தலைமுடியின் நீளத்தை வெட்டவோ மாற்றவோ இல்லை, தற்போது 5 அடி 8 அங்குலம் (172.7 செ.மீ.) நீளத்தில் அவரது தலைமுடி இருக்கின்றது.

உலகின் அனைத்து வகையான சாதனைகளையும் பதிவு செய்யும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு தனது தலைமுடியின் நீளத்தை காட்டும் காணொளியை Tammy Manis அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், கின்னஸ் உலக சாதனைகள் Tammy Manis உலகின் மிக நீளமான முடியை கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2024ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version