Site icon Tamil News

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு இரு அவைகளும் அனுமதி!

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரு சபைகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.

கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசுக்கு அனுமதிக்கப்பட்ட 31.38 ட்ரில்லியன் டொலர் கடன்அளவை கடந்த ஜனவரியிலேயே அமெரிக்க அரசு நெருங்கிவிட்டது.

அதன்பின் அமெரிக்க அரசு நிதி நெருக்கடிக்களை எதிர்கொண்டு வந்தது. செலவுகளுக்குப் பணம் இல்லாமல் வங்குரோத்து அடையும் நிலையை அமெரிக்க மத்திய அரசு எதிர்கொண்டுவந்தது.

இந்த உச்சவரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெறப்பட வேண்டும். அமெரிக்க வரலாற்றில் நூற்றுக்கும் அதிகமான தடவைகள் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ தற்போதும் இரு அவைகளும் அனுமதியளித்துள்ளன. இதனால் முதல் தடவையாக வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து அமெரிக்கா தப்பியுள்ளது.

Exit mobile version