Site icon Tamil News

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.

எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஷா பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. கவுதம் கம்பீர் வளர்ச்சியடைந்து வரும் கிரிக்கெட்டை அருகிலிருந்து பார்த்தவர்.

தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை எதிர்கொண்டு, சிறந்து விளங்கியதால் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version