Site icon Tamil News

இன்டர் மியாமியின் முதல் கோப்பைக்கு தலைமை தாங்கிய லியோனல் மெஸ்ஸி

அமெரிக்க கால்பந்தாட்டத்தில் பிரபலமானது லீக்ஸ் கோப்பை போட்டிகள்.இந்த கோப்பைக்கான இறுதி ஆட்டம் அமெரிக்காவின் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில், நாஷ்வில் எஸ்சி (Nashville SC) அணி, இன்டர் மியாமி அணியோடு மோதியது.

உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினாவின் வீரரான லயனல் மெஸ்ஸி, சமீபத்தில் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

எனவே இந்த போட்டிகளை உலகெங்குமிலுள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கண்டு வந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டித்தொடரில் மெஸ்ஸி 10 கோல்களை போட்டார்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1-1 என்ற செட் கணக்கில் கோல் அடித்து சமன் செய்தன.

எனவே போட்டியின் வெற்றி பெனால்டியை வைத்து முடிவு செய்யப்பட்டது.

பெனால்டிகளில் 10க்கு 9 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Exit mobile version