Site icon Tamil News

ஜேர்மனுக்கான எரிவாயு குழாய் உடைக்கப்பட்ட விவகாரம்: விசாரணையிலிருந்து பின்வாங்கிய சுவீடன்

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய் உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையிலிருந்து சுவீடன் திடீரென பின்வாங்கியுள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு, இத்திட்டத்தின் கீழ் ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. அதன் பின்னணியில் சதிவேலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பல நாடுகள் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், சுவீடன் நாட்டு அதிகாரிகள், திடீரென விசாரணையை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

16 மாதங்களாக சுவீடன் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எதனால் அவர்கள் திடீரென பின்வாங்கியுள்ளார்கள் என்பது தெரியாத நிலையில், தங்களுக்கு அந்த வழக்கில் சட்டப்படி அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

சுவீடன் மக்களோ, அல்லது சுவீடன் நாடோ அந்த விடயத்தால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாத நிலையில், சட்ட ரீதியாக அந்த வழக்கை விசாரிக்க தங்களுக்கு அதிகாரமில்லை என்றும், அதனால் தாங்கள் அந்த வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர உள்ளதாகவும் சுவீடன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version