Site icon Tamil News

மிதக்கும் சிறை – மறுப்பவர்களுக்கு பிரிட்டன் அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்கும் திட்டத்தில் முதல் படி எடுத்துவைத்துவிட்டது பிரித்தானிய அரசு.

Barge எனப்படும் இந்த மிதவைப்படகுகள்தான் இனி புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குமிடமாக ஆக்கப்பட உள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் 15 புகலிடக்கோரிக்கையாளர்கள் ஏற்றப்பட்டாயிற்று.

அந்த மிதவைப்படகு 222 பேர் மட்டுமே தங்கும் வசதிகொண்டது என்றும், அதில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கவைக்கப்பட இருப்பதாகவும், அத்துடன், படகில் லைஃப் ஜாக்கெட்கள் இல்லையென்றும், தண்ணீரில் நிற்கும்போது படகில் தீப்பற்றினால் தீயை அணைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மிதக்கும் சிறை என விமர்சிக்கப்படும் படகுகளில் ஏறாதவர்களுக்கு அரசு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் ஏறாதவர்களுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் உங்களுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் படகில் ஏறாவிட்டால், நீங்கள் உள்துறை அலுவலகத்திலிருந்து பெற்றுவரும் உதவிகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version