Tamil News

கங்குவா ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு…

சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், அதே தேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் ஆவதால், கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சூர்யா அறிவித்தார். இந்நிலையில், கங்குவா படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட் எப்போது வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கங்குவா படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற அப்டேட்டை படக்குழு, நாளை காலை அதாவது செப்டம்பர் 19ஆம் தேதி காலை, 11 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரும், இந்தத் தகவலை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version