Tamil News

மூன்று தசாப்தங்களை கொண்டாடும் ஜென்டில்மேன் திரைப்படகுழு

ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

ஷங்கர் ஆகஸ்ட் 17, 1963-ல் கும்பகோணம் என்ற ஊரில் பிறந்தார். இவர் பொறியியலில் பட்டய படிப்பு முடித்தவர். பின்பு எஸ் எ சந்திரசேகரிடம் வசன எழுத்தாளராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஆனார்.

ஷங்கரின் முதல் படம் ஜென்டில் மேன் ஆகும். இப்படத்தின் ஆக்கச்செலவு 50 மில்லியன் ஆகும். ஷங்கர் என்றாலே மிகப்பெரிய ஆக்கச்செலவு படமாகவே அமையும். 1993-ம் ஆண்டு 50 மில்லியனில் ஆரம்பித்த அவரது பயணம் இன்று வரை தொடர்கின்றது.

இயக்குனர் ஷங்கரை இயக்குராக வைத்த முதல் படம் ஜென்டில்மேன். இந்த படம் வெளிவந்து சுமார் 30 வருடங்களாகின்றன.

இதையடுத்து ஜென்டில்மேன் ரிலீஸின் மூன்று தசாப்தங்களை படக்குழுவினர் கொண்டாடுகின்றனர்.

இயக்குனர் தனது குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி இந்த இனிமையான தருணத்தை கொண்டாடுகின்றனர்.

 

Exit mobile version